PUBLISHED ON : ஜூலை 10, 2022

அ நிறம் | அளவு
தென் அமெரிக்க நாடான பிரேசிலைச் சேர்ந்தவர், வால்டர் ஆர்த்மான். இவருக்கு, 100 வயதாகிறது. கடந்த, 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி, 'உலகின் மிகவும் விசுவாசமான ஊழியர்' என, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 'இன்டஸ்ட்ரியல் ரெனாக்ஸ்' என்ற ஜவுளி நிறுவனத்தில், 1938ல், பார்சல் பிரிவில் பணிக்கு சேர்ந்த இவர், உதவியாளர், கணக்காளர், விற்பனை மேலாளர் என, படிப்படியாக பதவி உயர்வு பெற்று, 100 வயதிலும், 25 வயது இளைஞரைப் போல் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார்.
தற்போது வாங்குவதை விட, 100 ரூபாய் சம்பளம் அதிகமாக கொடுத்தால், வேறு நிறுவனத்துக்கு ஓட்டம் பிடிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு மத்தியில், இவர் ஒரு அதிசய பிறவி தான்.
— ஜோல்னாபையன்
