
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுவாக பெண்கள், தங்களுக்கு குறுகலான இடை இருக்க வேண்டும் என, ஆசைப்படுவர். இதற்காக இளம் பெண்களும், நடிகையரும், உடலை வறுத்தி, உடற்பயிற்சி செய்து, உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுவதும் உண்டு.
ஆனால், தென் கிழக்காசிய நாடான மியான்மரை சேர்ந்த, சுமோ மோ நாய்ங் என்ற, 23 வயது பெண், எந்தவிதமான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றாமல், 'இன்ச்' இடுப்பழகியாக வலம் வருகிறார். இவரது இடையின் சுற்றளவு, 34.7 செ.மீ., தான்.
'மெல்லிடை அமைவதற்கு, நான் சிரமமே படவில்லை. எங்கள் குடும்பத்து பெண்களுக்கு இயற்கையாகவே மெல்லிடை தான். அந்த மரபணு காரணமாக, எனக்கும் மெல்லிடை அமைந்துள்ளது...' என்கிறார், நாய்ங்.
— ஜோல்னாபையன்

