sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

உங்கள் அழகுக்கும், உயரத்துக்கும் தொடர்பு உள்ளதா?

/

உங்கள் அழகுக்கும், உயரத்துக்கும் தொடர்பு உள்ளதா?

உங்கள் அழகுக்கும், உயரத்துக்கும் தொடர்பு உள்ளதா?

உங்கள் அழகுக்கும், உயரத்துக்கும் தொடர்பு உள்ளதா?


PUBLISHED ON : அக் 16, 2022

Google News

PUBLISHED ON : அக் 16, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு மனிதனின் வயதுக்கு ஏற்ற உயரம், கண்டிப்பாக இருக்க வேண்டும். உயரமாக இருப்பது தன்னம்பிக்கையையும், கம்பீரத்தையும், தனி அழகையும் தரக்கூடியது.

குழந்தைகள் உயரமாக வளர...



குழந்தைகளின் உயரம் சற்று குறைவாக இருந்தால், அதற்கு அவர்கள் மரபணு மட்டும் காரணமாக இருக்காது. அவர்களின் உடல் வளர்ச்சி ஹார்மோன் துாண்டப்படாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம்.

சரியான அளவில், போதுமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை அவர்கள் சாப்பிடாததும், உடல் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடாததும் தான் இந்த பிரச்னையை ஏற்படுத்தும்.

மேலும், நம் உடலில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி தான், மனித வளர்ச்சிக்கான ஹார்மோனை அதிகம் சுரக்கிறது. இந்த ஹார்மோன் சுரப்பை துாண்டவும், அதை சீராக வைத்திருக்கவும் சில அடிப்படை விஷயங்களை கண்டிப்பாக நாம் பின்பற்றியே ஆகவேண்டும்.

அந்த வகையில் உயரமாக வளர கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

ஆழ்ந்த துாக்கம்!



நாம் துாங்கும்போது, திசுக்கள் புதுப்பிக்கப்படுகிறது. அதோடு, உடலும் சீராக வளர்ச்சியடையும். எனவே, நாம் உயரமாக வளர, உடலுக்கு போதிய ஓய்வு தேவை. அதிலும், வயதுக்கேற்ற துாக்கம் கட்டாயம் அவசியம். சிறு வயதினர் தினமும், 8 - 11 மணி நேரமும், பெரியவர்கள், 7 - 8 மணி நேரம், கட்டாயம் ஆழ்ந்த துாக்கத்தை மேற்கொண்டால், நன்கு உயரமாக வளர முடியும்.

கால்சியம் சத்துள்ள உணவுகள்!



எலும்புகள் வலிமையாவதற்கு தேவை கால்சியம். அதற்கு, கால்சியம் நிறைந்த உணவுகளான பால் பொருட்கள், முட்டை, மீன், காளான் மற்றும் பச்சை நிற காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

தண்ணீர்!



குளிர்பானங்கள், கார்போனேட்டட் பானங்கள் போன்றவற்றை தவிர்த்து, தண்ணீர் குடிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால், நம் உடலின், 'மெட்டபாலிசம்' அதிகரிக்கும். மேலும், நம் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க உதவுகிறது.

வைட்டமின் டி!



வைட்டமின் டி, நம் எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் சத்துக்களை தரக்கூடியது. உடலில் சூரிய ஒளி படுவதால், உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கிறது. சிறு வயதிலேயே குழந்தைகள் வெயிலில் விளையாடுவதை வழக்கமாக்கிக் கொள்ளச் செய்தால், அவர்களுக்கு வைட்டமின் டி எளிதில் கிடைக்கும்.

ஸ்கிப்பிங் உடற்பயிற்சிகள்!



குழந்தைகள் எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவர்களை ஓடி, ஆடும் விளையாட்டுகளில் அதிகம் ஈடுபடச் செய்ய வேண்டும்.

இதனால் வயதுக்கேற்ற உயரம் அவர்களுக்கு கிடைக்கும். அதிலும், கூடைப்பந்து, ஸ்கிப்பிங், கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், நடனம் மற்றும் நீச்சல் போன்றவற்றை விளையாடச் செய்யலாம்.

ஏ.எஸ்.ஜி.,






      Dinamalar
      Follow us