தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - கடற்தாமரை!

கவிதைச்சோலை - கடற்தாமரை!

கவிதைச்சோலை - கடற்தாமரை!


PUBLISHED ON : ஜூலை 16, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முக்கடலும் சங்கமிக்கும் குமரியில் உதித்து - அதன்

முன்னேற்றப் பாதைக்கு வித்திட்ட மூத்தவரே...

மக்கள் தொண்டே மகேசன் தொண்டென

மக்கள் பணி செய்த மா மனிதரே!

ஜாதி - மத பேதங்களை கடந்து

கல்வி அனைவருக்கும் பொதுவென

கல்வி சாலைகள் திறந்த கல்வியாளரே!

தாம் பிறந்த மண்ணிற்கு

தம்மால் முடியும் வரை அல்ல

தம் மூச்சு உள்ளவரை

பணி செய்த தமிழ் மாமணியே!

கல்விப்பணி ஆற்றிய சான்றோரை

கவுரப்படுத்தி ஊக்குவித்த உத்தமரே!

தமிழர் வாழ் தென் குமரியைதாய்திரு நாட்டுடன் இணைப்பதே

தலையாய கடமையென்று உணர்ந்து

தமிழ் தொண்டாற்றிய நாயகனே!

பொழுது விடியும் தருணம் நம் கரங்களில்

பொக்கிஷமாக விழும் இதழை

பொது நோக்கமுடன் சேர்த்தவரே!

படைப்புகளுக்கு மட்டுமல்லாமல்

படைப்பாளிகளுக்கும் தம் நாளிதழின் மூலம்

வாழ்வளித்த பெருந்தகையே!

வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து

மக்கள் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்ற

மகத்தான படைப்பாளியே!

ஆண்டுகள் பற்பல கடந்தாலும்

அன்று போல் இன்றும் நினைவு கூர்கிறோம்

அமரரான கடற்தாமரையே!

— ரெஷ்மி சிவகுமார், கோயம்புத்துார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us