தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - வக்கிர எண்ணங்களை வதம் செய்வோம்!

கவிதைச்சோலை - வக்கிர எண்ணங்களை வதம் செய்வோம்!

கவிதைச்சோலை - வக்கிர எண்ணங்களை வதம் செய்வோம்!


PUBLISHED ON : நவ 12, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 12, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* இரவை பகலாக்கும் இத்திருநாள்

நம் அகம் இருள் நீக்கி

சுகம் பல கொடுக்கும்

தீப ஒளித் திருநாள்!

* காவிரி போன்ற புனித நதிகள்

மாசு படுவதைத் தடுக்க

இந்நாளில் உறுதிமொழி எடுத்து

அதிகாலை எழுந்து

கங்கா ஸ்நானம் செய்திடுவோம்!

* கைபேசி சிறையிலிருந்து

ஒருநாள் விடுதலை வாங்கி

சங்கு சக்கரம் சுழல்வது போல்

நண்பர்கள், உற்றார்களுடன் வலம் வந்து

பேசிக் குலாவி மகிழ்ந்திடுவோம்!

* ஆதரவற்றோர், அனாதை குழந்தைகளைநாடிச்சென்று

புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி

வண்ண வண்ண புஸ்வானமாய்

உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சி

பூப்பூவாய் பூத்துக் குலுங்கட்டும்!

* வெற்றிகள் வலம் வந்து

சாதனைகள் பல படைக்க

மேல் எழும்பும் ராக்கெட்டாய்

நமது இலக்குகளும் மேலே மேலே

உயர்ந்து செல்லட்டும்!

* நரகாசுரன் வதம் செய்யப்பட்ட இந்நாளில்

மனதில் அவ்வப்போது தோன்றும்

பொறாமை, சூழ்ச்சி, வஞ்சனை

வக்கிர எண்ணங்களை

வதம் செய்ய உறுதி எடுப்போம்!

* மனதின் எதிர்மறை எண்ணங்கள்

சரவெடி போல் வெடித்துச் சிதற

நேர்மறை எண்ணங்கள்

தீபங்களின் வரிசை போல்

அணிவகுத்து வரச் செய்வோம்!

* பண்பாடு பழக்க வழக்கம் மாறாமல்

பாரம்பரியப் பெருமை சிதையாமல்

பட்டொளி வீசும் இத்திருநாளை

பகட்டின்றி நோக்கிடுவோம்

பரவசமாய் கொண்டாடிடுவோம்!

பூவைசுபாவாணன், கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us