PUBLISHED ON : அக் 30, 2022

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அணையாத கோபம்
அடிக்கல் இட்டு வந்தால்
அமைதியற்ற வாழ்வு என்பதை
நினைவில் கொள்வோம்!
இணையாத இன்பம்
இல்லமேறி வந்தால்
இருட்டறையே வாழ்வு என்பதை
நினைவில் கொள்வோம்!
பொறுக்காத பொறுமை
பொங்கி வந்தால்
பொல்லாத வாழ்வு என்பதை
நினைவில் கொள்வோம்!
தொலைக்காத துயரங்கள்
தொடர்ந்து வந்தால்
துன்பமான வாழ்வு என்பதை
நினைவில் கொள்வோம்!
கலையாத கவலை
கையோடு வந்தால்
கல்லறைதான் வாழ்வு என்பதை
நினைவில் கொள்வோம்!
மாறாத வலி
மனதினுள் வந்தால்
மகிழ்ச்சியற்ற வாழ்வு என்பதை
நினைவில் கொள்வோம்!
நிலைக்காத நிம்மதி
நீண்டு போனால்
நிச்சயமற்ற வாழ்வு என்பதை
நினைவில் கொள்வோம்!
நீங்காத ஆசை
நெஞ்சோடு வந்தால்
நிறைவற்ற வாழ்வு என்பதை
நினைவில் கொள்வோம்!
அமைதி குலைக்குமிந்த
அழுக்கு வஸ்திரங்களை
அலசி அணிந்து கொண்டால்
அமைதியான வாழ்வு என்பதை
நினைவில் கொள்வோம்!
க. அழகன், கொச்சி