தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - காதல் சாம்ராஜ்யம்!

கவிதைச்சோலை - காதல் சாம்ராஜ்யம்!

கவிதைச்சோலை - காதல் சாம்ராஜ்யம்!


PUBLISHED ON : ஜூன் 11, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தோற்றாலும் வெல்வது

காதலில் மட்டுமே

இதயச் சிறையில்

ஆயுள் கைதியாய் அவள்!

இதய சிம்மாசனத்தில்

தன் காதல் ராணியை

அமர வைத்த பிறகே

படையெடுக்கின்றனர்

காதல் ராஜாக்கள்!

சொல்வதாலும்

சொல்லாததாலும்

தோல்வியை சந்திக்கின்றன

காதலில் பல!

வெற்றி பெறும்

காதலில் சில

காணாமல் போகின்றன

கல்யாணத்திற்கு பின்!

குடி கெடுக்குமென தெரிந்தும்

குடிப்பது போல

எதைப் பற்றியும் கவலையின்றி

தொடரத்தான் செய்கின்றன

காதலில் பல!

உயிரை இழந்த பின்பும்

உயிர்த்தெழுகின்றன

வரலாறாய் பல காதல்!

காதல் இல்லாத வாழ்வுஉப்போ அல்லது இனிப்போ

இல்லாத வெறுமை!

காதல் இன்னொரு உலகம்

நீயே ராஜாவாய்

நீயே மந்திரியாய்

அமைத்துக்கொள்

பூஜ்யம் இல்லாத

காதல் சாம்ராஜ்யம்!

 வீ. உதயக்குமாரன், திருவாரூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us