தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - வாழ்வின் அழகு!

கவிதைச்சோலை - வாழ்வின் அழகு!

கவிதைச்சோலை - வாழ்வின் அழகு!


PUBLISHED ON : அக் 29, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உறக்கத்திற்கு தினந்தினம்

விடை கொடுப்பதைப் போல

உங்கள் கனவுகளுக்கு

ஓய்வு கொடுக்காதீர்கள்!

விழலுக்கு இரைத்த நீரைப் போல

விலை மதிக்க இயலா

உங்கள் தனித்துவமான திறமைகளை

விரயம் செய்யாதீர்கள்!

அபயம் என்று யாசிப்போருக்கு

கடுகளவும் உதவாமல்

கோடி கோடியாய் சம்பாதித்தாலும்

அது வெற்றுக் குப்பையே!

வள்ளுவன் வாய்மொழிக்கிணங்க

சொற்பக் கையிருப்பைக் கொண்டும்

பகுத்துண்டு வாழ்தலே

மனிதராய் பிறந்தோருக்கு சிறப்பு!

கூட்டத்தின் முதல்வனாய்

உன்னை தனித்துக் காட்டு!

இதயத்தில் அன்பை நிரப்பிசக மாந்தரை நேசி

குறையே சொன்னாலும் புறந்தள்ளி

அவர்களுக்கும் இரக்கம் காட்டு!

பாதங்களின் மிதியை

பொறுமையாய் தாங்கி நம்மை

வீழ்ந்து விடாமல் ஏந்திக் கொள்ளும்

பூமியைப் போல வாழப் பழகு!

பறவைகளின் எச்சம் ஏற்று

வனம் செழிப்பதைப் போல

அவமானங்கள் தாங்கி எழு

அதுவே வாழ்வின் அழகு!

— விஜயன் செல்வராஜ், கள்ளக்குறிச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us