PUBLISHED ON : செப் 24, 2023

எண்ணங்கள் மாசு படாமல்
இருக்கும் வரை
விமர்சனங்களை தாங்கும்
தைரியம் தானாக வரும்!
எண்ணங்கள் சலனம் ஆகாமல்
இருக்கும் வரை
தோல்விகளை சந்திக்கும்
வலிமை தானாக வரும்!
எண்ணங்கள் சந்தேகம் பரவாமல்
இருக்கும் வரை
விரும்பாத நிகழ்வுகள்
விலகி போய் விடும்!
எண்ணங்கள் நேர்மை மாறாமல்
இருக்கும் வரை
பண்புமிகு காட்சிகள்
கண்களில் வரிசை கட்டும்!
எண்ணங்கள் பேராசை
துாண்டிலில் சிக்காத வரை
வாழ்க்கையில் தாழ் நிலை
நேரங்கள் தவிர்க்கப்படும்!
எண்ணங்கள் சிந்திக்கும்
சீர் மிகு செயல்கள்
நல் வழி பாதையில்
வாழ்க்கை தடம் பதிக்கும்!
எண்ணங்கள் தரும்
நேர்மறை சிந்தனைகள்
எதிர்மறை களைந்து
வான் புகழ் தந்து விடும்!
எண்ணங்கள் அறம் மாறாமல்
இருக்கும் வரை
அன்புமிகு நெஞ்சங்கள்
இதயத்தில் இடம்பெறும்!
எண்ணங்கள் சிதறாமல்
பயணம் தொடரட்டும்...
வாழ்க்கை தடங்கள்
வெற்றி சிகரம் தொடட்டும்!
— வி. சுவாமிநாதன், சென்னை.
