PUBLISHED ON : ஏப் 29, 2018

அ நிறம் | அளவு
பெண்கள் பலவீனமானவர்கள் என்று நினைப்போருக்கு, சவால் விட்டு சாதனை படைத்துள்ளார், ஜமுனா என்ற கிராமத்துப் பெண்.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இருந்து, 200 கி.மீ., துாரத்தில் உள்ளது, முதுார்கம் கிராமம். இவ்வூரைச் சேர்ந்த ஆதிவாசி பெண் ஜமுனா, விறகு சேகரிக்க, காடுகளுக்கு போகும்போது தான், மரங்களை நேசிக்கத் துவங்கினார்.
வன மாபியாக்கள், மரங்களை வெட்டி, கடத்துவதை கண்டு ஆரம்பத்தில் கண் கலங்கினாலும், பின், எதிர்த்து போராடத் துவங்கினார். மாபியாக்களின் கொலை மிரட்டல்களுக்கு அஞ்சாமல், 'வன பாதுகாப்பு சமிதி' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். 10ம் வகுப்பு வரையே படித்த, இந்த ஆதிவாசி பெண், இன்று, ஆயிரக்கணக்கான மரம் நேசிப்பாளர்களுடன் சேர்ந்து, வனத்தில் உள்ள மரங்களை பாதுகாத்து வருகிறார்.
— ஜோல்னாபையன்.
