தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!


PUBLISHED ON : செப் 03, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 03, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைதா குஜியா!

தேவையான பொருட்கள்: சர்க்கரை - 250 கிராம், எண்ணெய் - 300 கிராம்.

மேல் மாவுக்கு: மைதா - ஒரு கப், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, சாதாரண உப்பு - அரை சிட்டிகை, நெய் - ஒரு தேக்கரண்டி.

பூரணத்துக்கு: பால்கோவா - 200 கிராம், ஏலக்காய் துாள், வறுத்த முந்திரி, உலர் திராட்சை - சிறிதளவு.

செய்முறை: சர்க்கரையில் ஒரு கரண்டி நீர் விட்டு, கெட்டி பாகு காய்ச்சவும். பூரணத்துக்கான பொருட்களை நன்கு கலந்து எலுமிச்சம்பழ அளவு உருண்டைகள் செய்யவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றை சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக பிசைந்து, சிறிய அப்பளமாக இட்டு, பூரணம் நிரப்பி, சோமாசி போல மடிக்கவும். எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து சோமாசி போல் மடித்து வைத்துள்ளவற்றை சிவக்க பொரித்து, தட்டில் வைக்கவும். ஒவ்வொன்றின் மீதும் ஒரு தேக்கரண்டி சர்க்கரை பாகு விட்டு ஒன்றுடன் ஒன்று ஒட்டாதவாறு வைக்கவும்.

ஜீரா முந்திரி!

தேவையான பொருட்கள்: முழு முந்திரி (பூச்சி, புழு இன்றி பார்த்து வாங்கவும்) - 100 கிராம், சர்க்கரை - 75 கிராம், நெய் - அரை தேக்கரண்டி, ஏலக்காய் துாள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: சர்க்கரையை சிறிதளவு நீர் விட்டு நன்கு காய்ச்சவும். பூத்து வரும் சமயத்தில், நெய், ஏலக்காய் துாள், முந்திரியும் சேர்த்து வேகமாக கிளறி, முந்திரி மீது சர்க்கரை பாகு படிந்து மொறு மொறுவென ஆகும்போது, தட்டில் எடுத்து வைக்கவும்.

மகிழம்பூ முறுக்கு!

தேவையான பொருட்கள்: பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தியது) - 300 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், கடலைப் பருப்பு - 50 கிராம், எண்ணெய் - கால் கிலோ, பெருங்காய துாள், உப்பு தேவையான அளவு. காய்ச்சிய எண்ணெய் இரண்டு தேக்கரண்டி.

செய்முறை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து, ஆறவிட்டு அரிசியுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இத்துடன் காய்ச்சிய எண்ணெய் உப்பு, பெருங்காய துாள் சேர்த்து தேவையான நீர் விட்டு பிசையவும். மாவை முள்ளு முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்காக பிழிந்து, சிவந்த பின் எடுக்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us