PUBLISHED ON : ஜூலை 28, 2019

அ நிறம் | அளவு
சிரிக்கும் புத்தர் சிலை, உலகம் முழுவதும் பிரபலம். 'இந்த சிலையை வைத்திருந்தால், அதிர்ஷ்டம் கிடைக்கும்...' என, பலரும் நம்புகின்றனர்.
அண்டை நாடான, சீனாவைச் சேர்ந்த ஒருவர், சிரிக்கும் புத்தர் சிலையாகவே மாறி, அனைவருக்கும், அருள் வார்த்தை கூறி வருகிறார். குண்டான உடல்வாகு உடைய இவருக்கு, தொப்பையும் அதிகம்.
மக்கள் அதிகம் திரளும் இடத்தில், இரண்டு கால்களையும் நீட்டி, சிரித்தபடி அமர்ந்து விடுகிறார். பொதுமக்கள், இவரிடம் ஆசி பெற்று செல்கின்றனர்.
பிரபலமான நிறுவனங்களும், தங்கள் விழாக்களுக்கு, இவரை அழைத்து, மேடையில் அமர வைத்து விடுகின்றன. இவருடைய ஆசி கிடைத்தால், நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கும் என, நம்புகின்றனர்.
இதற்காக, இவருக்கு, கணிசமாக பணமும் கொடுக்கின்றனர். இதனால், இவரது வங்கி கணக்கில், பணம் குவிய துவங்கியுள்ளது.
— ஜோல்னாபையன்.
