/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நம்மிடமே இருக்கு மருந்து! - வேர்க்கடலை!
/
நம்மிடமே இருக்கு மருந்து! - வேர்க்கடலை!
PUBLISHED ON : ஆக 28, 2022

நம் நாட்டில் வேர்க்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில், அது கொட்டை வைக்கும் பருவம் வரை, எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால், வேர்க்கடலை காய் பிடிக்கும் பருவத்துக்கு பிறகு, எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். வேர்க்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய் மற்றும் வயல் வெளியின் அருகில் வசிக்கும் பறவைகள் எல்லாம், ஒரே நேரத்தில் குட்டி போடும்.
வேர்க்கடலையில், போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால், இனப்பெருக்கம் விரைவாக நடைபெறும். எனவே, வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன், கர்ப்பப்பை கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது, குழந்தைப் பேறும் உண்டாகும். பெண்களுக்கு மார்பக கட்டி உண்டாவதையும், நீரழிவு நோயையும் தடுக்கிறது.
இதில், மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. நாம் உண்ணும் உணவிலிருந்து கால்சியம் நம் உடலுக்கு கிடைக்க மாங்கனீசு சத்து பயன்படுகிறது. குறிப்பாக, பெண்கள் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
வேர்க்கடைலையை, 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால், பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும். 20 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், இது தெரிய வந்துள்ளது.
உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் வேர்க்கடலை சாப்பிடலாம். வேர்க்கடலையில், 'ரெஸ்வரெட்ரால்' என்ற சத்தும் நிறைந்துள்ளது. இது, இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.
இதில் உள்ள, 'பாலிபீனால்ஸ்' என்ற ஆன்டி ஆக்சிடென்ட், நோய் வருவதை தடுப்பதுடன், இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
வேர்க்கடலையில் உள்ள வைட்டமின்3, நியாசின், மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது; ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. மேலும், 'பரிப்டோபான்' என்ற முக்கிய அமினோ அமிலம், மூளையை உற்சாகப்படுத்தும். மூளை நரம்புகளை துாண்டி, மன அழுத்தத்தை போக்குகிறது.
வேர்க்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது, நம் உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. 100 கிராம் வேர்க்கடலையில், மோனோ அன்சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு - 24 கிராம், பாலி அன்சாச்சுரேட்டேட் - 16 கிராம் உள்ளது. இந்த இருவகை கொழுப்புகளுமே, நம் உடம்புக்கு நன்மை செய்பவை. பாதாமை விட வேர்க்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. வேர்க்கடலையில் உள்ள ஒமேகா 3 சத்தானது, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
உலக அளவில், சீனாவிற்கு அடுத்து இந்தியாவில் தான் வேர்க்கடலை அதிகம் விளைகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் வேர்க்கடலை முக்கிய காரணமாக உள்ளது.
இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்து மற்றும் சில இதய நோய்க்கான மருந்து விற்பனைக்கு, வேர்க்கடலை உண்ணும் வழக்கம் தடையாக உள்ளது. எனவே, இதுகுறித்து தவறான தகவல்களை இந்தியர்களிடம் பரப்பி, வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை எண்ணெய் பயன்படுத்துவதை தடுத்து விட்டனர். இதன் காரணமாக, குழந்தை இல்லாத தம்பதியர் பெருகி விட்டனர்.
கடந்த, 20 ஆண்டுகளில், இந்தியாவில் வேர்க்கடலையின் விலையில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால், இதே காலகட்டத்தில், அமெரிக்கர்களின் உணவில் வேர்க்கடலையின் பயன், 15 மடங்கு கூடியிருப்பதுடன், விலையும் அதிகரித்துள்ளது.
இந்தியர்கள் அனைவரும் வேர்க்கடலை சாப்பிட ஆரம்பித்தால், அமெரிக்கர்கள், அதிக விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதி தான், இதுகுறித்து நம்மிடம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன.
ஜி. ஜெயா