PUBLISHED ON : ஆக 19, 2018

அ நிறம் | அளவு
முன்னாள் பிரதமர், ராஜிவ்வின் மகளான பிரியங்கா வதோரா, தன் தந்தை பற்றிய நினைவுகளை தொகுத்து, ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதி வருகிறார். இந்த ஆண்டு கடைசியில் இப்புத்தகம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, புலிகள் பற்றி, 'ரான்தம்பூர் டைகர்ஸ் ரெல்ம்' என்ற ஆங்கில புத்தகத்தை எழுதியுள்ளார், பிரியங்கா. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், ரான்தம்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ள புலிகள் சரணாலயத்துக்கு முதலில் தந்தையுடனும், பின், தன் குழந்தைகளுடனும் சென்றுள்ளார். அந்த அனுபவத்தை வைத்தே மேற்படி புத்தகத்தை எழுதியுள்ளார்.
— ஜோல்னாபையன்.
