PUBLISHED ON : ஜூன் 10, 2018

அ நிறம் | அளவு
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், டெவோன் என்ற பகுதியில், வில்லாண்ட் என்ற குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் நிலப்பகுதி, ஒவ்வொரு ஆண்டும், 2 செ.மீ., அளவு உயர்வதாக கண்டுபிடித்துள்ளனர், புவியியல் வல்லுனர்கள்.
நான்கு ஆண்டுகளாக, இந்த பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் வரைபடத்திலும், இந்த கிராமம் அமைந்துள்ள, 2 கி.மீ., சுற்றளவு பகுதி மட்டும் அங்குள்ள மற்ற பகுதிகளை விட உயர்ந்து காணப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கான சரியான காரணத்தை, யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
'சுரங்கத் தொழில் நடக்கும் பகுதிகளில், இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது வழக்கம். ஆனால், இந்த பகுதியில், அதுபோல் எதுவுமில்லை. ஆனாலும், விரைவில், இதற்கான காரணத்தை கண்டுபிடித்து விடுவோம்...' என்கின்றனர், புவியியல் நிபுணர்கள்.
—ஜோல்னாபையன்.
