
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'நான்கு வயது குழந்தைக்கு, இப்படியொரு நினைவாற்றலா...' என்று, சர்காவை பார்த்து அசந்து போகின்றனர், பொதுமக்கள்!
'நாட்டில் எத்தனை பிரதமர்கள் இருந்தனர், முதல் பிரதமர் யார், இன்றைய பிரதமர் யார், நாட்டில் எத்தனை மாநிலங்கள் உள்ளன...' என்று கேட்டால், உடனுக்குடன் பதில் அளித்து, மழலை சிரிப்புடன் நம்மை வியக்க வைக்கிறாள், சர்கா.
'கேரளாவின் இன்றைய முதல்வர், முன்னாள் முதல்வர்கள், எத்தனை மாவட்டங்கள்...' என்று, எதை கேட்டாலும், பதில் சொல்லி அசத்துகிறாள்.
கேரளா மாநிலம், கறுகச்சால் என்ற கிராமத்தில் கூலி தொழிலாளிகளான பெற்றோரின் பயிற்சி தான், இந்த குழந்தையை இப்படி உருவாக்கி இருக்கிறது.
—ஜோல்னாபையன்