PUBLISHED ON : ஆக 14, 2022

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த, 1934ல், காந்திஜி, சேலம் வந்திருந்தபோது, காங்கிரஸ் பிரமுகரும், அவருடைய நெருங்கிய நண்பருமான, நடேசன் பண்டாரம் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த கட்டடத்தை அரசுக்கு தந்து விட்டார், நடேசன். 1997ம் ஆண்டு முதல், தபால் தலை அருங்காட்சியகமாக செயல்படுகிறது. அங்கு, காந்திஜி அமர்ந்த இருக்கை, கை ராட்டை, செருப்பு, தட்டு, படித்த புத்தகங்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன.