sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நயன்தாரா மாதிரி வரணும்! - மானஸ்வி

/

நயன்தாரா மாதிரி வரணும்! - மானஸ்வி

நயன்தாரா மாதிரி வரணும்! - மானஸ்வி

நயன்தாரா மாதிரி வரணும்! - மானஸ்வி


PUBLISHED ON : நவ 11, 2018

Google News

PUBLISHED ON : நவ 11, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இமைக்கா நொடிகள் படத்தில், நயன்தாராவின் மகளாக நடித்தவர், மானஸ்வி. அதன்பின், தற்போது, அரை டஜன் படங்களில், 'பிசி'யாக நடித்து வருகிறார்.

வாரமலர் இதழுக்கு, அவர் அளித்த பேட்டி:

இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தது, ரசிகர்களிடம் எப்படிப் பட்ட வரவேற்பை பெற்றுள்ளது?

என்னோட நடிப்பை பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாம, சினிமா உலகில் இருந்தும் பலர் பாராட்டினாங்க. அது, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இந்த படத்துல என்னோட நடிப்ப பார்த்துட்டு, கும்கி - 2, கண்மணி பாப்பா, சுட்டுப்பிடிக்க உத்தரவு, இருட்டு, நயம் மற்றும் பரமபத விளையாட்டு என்று, அரை டஜன் படங்கள்ல நடிக்க, வாய்ப்பு கிடைச்சிருக்கு.

நயன்தாராவுக்கு மகளா நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?

முதல் நாள் என்னை பார்த்ததுமே, எங்கிட்ட அன்பா பேசினாங்க... அதனால, அவங்களோட நடிச்சப்ப, எந்த பயமும் இல்லை. 'ஷூட்டிங் ஸ்பாட்'ல இருந்தப்ப, எனக்கு தினமும், சாக்லேட் வாங்கி தருவாங்க... நிறைய, 'கிப்ட்' எல்லாம் கொடுத்தாங்க... என்னை, மடியில வச்சு கொஞ்சுவாங்க.

இப்ப, என்ன கிளாஸ் படிக்கிறீங்க...

எல்.கே.ஜி., படிக்கும் போது, இமைக்கா நொடிகள் படத்துல நடிக்க ஆரம்பித்தேன். இப்ப, முதல் வகுப்பு    படிக்கிறேன். என்னோட, 10 வயது வரைக்கும் சினிமாவுல நடிப்பேன். அப்புறம், முழு நேரமும் படிப்புல கவனம் செலுத்துவேன். அதுக்கு அப்புறமா ஹீரோயினா நடிப்பேன். நயன்தாரா ஆன்ட்டி மாதிரி நடிகையாகணுங்கிறது தான் என்னோட ஆசை. அவங்கதான் என்னோட, 'ரோல் மாடல்!'

படிப்புல நீங்க எப்படி...

ரொம்ப நல்லா படிப்பேன். அதுக்கு காரணம், என், 'டீச்சர்ஸ்' தான். சினிமாவுல நடிக்கிறதால எனக்கு ரொம்ப, உதவி பண்றாங்க. அதோடு, இமைக்கா நொடிகள் படத்தை பார்த்துட்டு, 'பிரேயர்ல' வாழ்த்தி பேசுனாங்க. அது, எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது.

'ஷூட்டிங் ஸ்பாட்'டுக்கு போறதுக்கு முன், பயிற்சி எடுப்பீங்களா...

'ஸ்பாட்டுல' இயக்குனர்கள் சொல்லித் தர்றதை கேட்டு, அப்படியே நடிப்பேன். மற்றபடி, 'டான்ஸ்' கூட நான் முறையா கத்துகிட்டது இல்ல. ஆனா, 'டான்ஸ் மாஸ்டர்' சொல்லிக் கொடுத்தா, அதன்படியே ஆடிடுவேன். எங்க அப்பா, காமெடி நடிகர், கொட்டாச்சி. வீட்டுல இருக்கும்போது, 'மியூசிக்' போட்டு, நானும், அப்பாவும், 'ஜாலி'யா, 'டான்ஸ்' பண்ணுவோம்.

அதோட, என்னோட முதல் படத்திலேயே, நான் தான், 'டப்பிங்' பேசினேன். எனக்கு மட்டுமில்லாம, வேற, 'சைல்டு ஆர்ட்டிஸ்டு'ங்களுக்கும், 'டப்பிங்' பேச சொன்னாலும், பேசுவேன்.

நடிகை த்ரிஷாவோட, பரமத விளையாட்டு படத்துல, எந்த மாதிரி வேடத்துல நடிக்கிறீங்க...

இந்த படத்துலயும், த்ரிஷா ஆன்ட்டிக்கு மகளா தான் நடிக்கிறேன். எங்க ரெண்டு பேரை சுற்றிதான் மொத்த கதையும் நகருது. அன்புள்ள ரஜினிகாந்த் படத்துல, ரஜினி சாரும், மீனா ஆன்ட்டியும் பாடுற மாதிரி, த்ரிஷா ஆன்ட்டிக்கும், எனக்கும் ஒரு பாட்டு இருக்கு.

நடிப்பு, படிப்பு தவிர, வேறு பிடித்த விஷயங்கள்...

'டான்ஸ்' மற்றும் விளையாட்டு பிடிக்கும். ஸ்கூல்ல நடக்குற எல்லா விளையாட்டுகளிலும் கலந்துக்குவேன். அதே மாதிரி, 'டான்ஸ்' போட்டின்னா, முதல் ஆளா நிற்பேன்.

வீட்டுல இருக்கும்போது, 'மியூசிக்' கேட்கிறதோடு, அந்த, 'பீட்'டுக்கு தகுந்த மாதிரி ஆடுவேன். அதுமட்டுமில்லாம, நானே ஒரு கேரக்டரை உருவாக்கி, பேசி, நடிப்பேன். இப்படி, 'மோனோ ஆக்டிங்' பண்றதால, இயக்குனர்கள், ஒரு கேரக்டரை பற்றி சொன்னதுமே, என்னால அதை உள்வாங்கி, 'ஈசி'யாக நடிக்க முடியுது, என்றார்.

குழந்தைகள் தின வாழ்த்துகள், மானஸ்வி.

- ராஜசேகரன்






      Dinamalar
      Follow us