தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஏப் 29, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.சி.சம்பத் எழுதிய, 'உலக அதிசயங்கள்' நுாலிலிருந்து: உலக அதிசயமாக கருதப்படுவது, சீனப் பெருஞ்சுவர். அதற்கு இணையான மற்றொரு பெருஞ்சுவர் உண்டு. இதுவும், உலக அதிசயங்களுள் ஒன்று. ஆனால், ஓரிரு மதிப்பெண் வித்தியாசத்தில் சீனப் பெருஞ்சுவர் உலக அதிசயமாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது.

உலகின் உயர்ந்த நிலை சமுதாயமாக ரோமானியர்கள் விளங்கிய பொற்காலம் அது. கி.பி., 122ல், ரோம சாம்ராஜ்யத்தை ஆட்சி புரிந்து வந்தான், ஹேத்ரியன் எனும் பேரரசன். அப்போது, ரோமானியர் ஆதிக்கத்தில் இருந்தது, பிரிட்டன்.

அச்சமயத்தில் ஒருநாள், ரோமாபுரிப் படையின் ஒன்பதாவது பிரிவு, திடீரென்று காணாமல் போனது. ஸ்காட்லாந்து ராணுவத்தினர், இரவோடு இரவாக பிரிட்டனுக்குள் நுழைந்து, சத்தம் போடாமல் எல்லாரையும் பிடித்துச் சென்று விட்டனர்.

செய்தி அறிந்து, ஆத்திரம் அடைந்தான், ஹேத்ரியன்.

ஸ்காட்லாந்து படை, அடிக்கடி பிரிட்டனுக்குள் வந்து, இப்படி திடீர் தாக்குதல் நடத்தி, தன் படைகளை பலவீனப்படுத்துவதால், பிரிட்டனுக்கும், ஸ்காட்லாந்துக்கும் இடையே பாதுகாப்பு அரணாக, பெருஞ்சுவர் ஒன்றை அமைக்க முடிவு செய்தான்.

இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள எல்லைக்கோடு மிக நீண்டது. 122 கி.மீ., நீளம்; அவ்வளவு தொலைவிற்கு ஒரு சுவரை, அதுவும் எதிரிகளின் தாக்குதலை தாக்குப்பிடித்து நிற்குமளவிற்கு வலிமையான சுவரை, அமைப்பது சாத்தியமா என்று யோசித்தான்.

இருப்பினும், சோர்ந்து விடாமல் செயலில் இறங்கினான், ஹேத்ரியன்.

சுவர் எழுப்புவதற்கு தேவையான கற்கள், சுண்ணாம்பு சாந்து எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்தான். சுவர் கட்டும் வேலைக்கு, நாட்டு மக்களை திரட்டினான். அவர்களுக்கு உணவு, உறைவிடத்திற்கு ஆங்காங்கே ஏற்பாடு செய்து, சுவர் எழுப்ப உத்தரவிட்டான்.

நாட்டுப் பற்று மிக்க மக்கள், பகை அரசன் படைகள் உள்ளே நுழையாதவாறு தடை செய்ய, உற்சாகத்தோடு பணியில் ஈடுபட்டனர். பலமான அடித்தளத்துடன், 112 கி.மீ., நீளத்திற்கு, கம்பீரமாக எழுந்து நின்றது, நெடுஞ்சுவர்.

அந்த நீண்ட சுவரை கட்டி முடிக்க, எட்டு ஆண்டுகள் ஆயிற்று. நெடுஞ்சுவருக்கு இடையே, 1,620 மீட்டர் நீளத்தில் ஒரு கோட்டையும் கட்டப்பட்டது.

கோட்டையின் இடையிடையே கண்காணிப்பு கோபுரங்கள். 112 கி.மீ., நீளம் கொண்ட அந்த நெடுஞ்சுவரை ஆயிரக்கணக்கான வீரர்கள் இடைவிடாமல் காவல் காத்தனர்.

சுவரை நிர்மாணித்த பேரரசன் பெயரால், அது, 'ஹேத்ரியன் நெடுஞ்சுவர்' என்றே அழைக்கப்பட்டது.

உலக அதிசயமாக போற்றப்படும், ஹேத்ரியன் நெடுஞ்சுவர், ஆங்காங்கே இயற்கை சீற்றங்களுக்கு உள்ளாகி பாழ்பட்டுள்ளது. இருப்பினும், உலகிற்கு ஹேத்ரியன் என்ற மன்னனின் பெயரையும், அவனது தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியையும் பறைசாற்றி நிற்கிறது.

மும்பையில், அனேக குடும்பங்களில், குழந்தைகள், தங்கள் தந்தையை காண்பதே அரிது. ஏனெனில், காலையில், குழந்தைகள் துாங்கி எழும் முன், வீட்டிலிருந்து புறப்பட்டு செல்லும் தகப்பன்மார்கள், வேலை முடிந்து, மீண்டும் இரவு வீடு வந்து சேரும்போது, குழந்தைகள் துாங்கி விடுவதே இதற்குக் காரணம்.

சில குழந்தைகள், 'அம்மா... அப்பா என்றால் யார்?' என்றும், 'ஓ... ஞாயிற்றுக்கிழமை வருவாரே... அந்த, அங்கிள் தான் அப்பாவா...' என்று கேட்கும் அளவுக்கு நிலைமை உள்ளது!

- தனியார் வானொலி நிகழ்ச்சியில் கேட்டது.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us