
கடந்த, 1881ல், கல்லுாரி பேராசிரியர் ஒருவர், வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்களும் ஆர்வமாக கவனித்து கொண்டிருந்தனர். 'உலகத்தில் உள்ள அனைத்தையும் கடவுள் தான் உண்டாக்கினார் என்பது உண்மையா...' என்றார், பேராசிரியர்.மாணவர்கள் மத்தியில் அமைதி. ஒரு மாணவர் எழுந்து, 'ஆம்... அதில் சந்தேகப்பட ஏதுமில்லையே...' என்றார்.'சரி... அப்படியானால், சாத்தானையும், அதாவது கெட்டவற்றையும் அவர் தான் படைத்தாரா...' என்று கேட்டார், பேராசிரியர்.சற்றும் தாமதிக்காத மாணவர், 'சார்... நீங்கள் தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், சில கேள்விகளை நான் உங்களிடம் கேட்கலாமா...' என்றார்.'ஒய் நாட்... தாராளமாக கேட்கலாம்... இதுபோன்ற நிலையை தான், நான் எதிர்பார்க்கிறேன். வாட் ஈஸ் யுவர் கொஸ்டீன்...' என்றார்.'குளிர் என்ற ஒன்று உண்டா...''நீ ஏதோ வித்தியாசமாக கேட்க போகிறாய் என்று எதிர்பார்த்தேன். மிக சாதாரணமாக கேட்கிறாய்... குளிர் உண்டே... எங்களுக்கெல்லாம் குளிர்கிறது... ஏன், உனக்கும் குளிருமே... நீ உணரவில்லையா...' என்றார், பேராசிரியர்.'சாரி, சார்... நீங்கள் தவறான விடையளிக்கிறீர்... குளிர் என்பது, தனியான ஒன்றல்ல... வெப்பம் முழுவதுமாக மறைந்துவிட்ட ஒரு நிலை தான்... மேலும், சார்... தவறாக எண்ண வேண்டாம்... தங்களிடம் மேலும் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்... கேட்கலாமா...' என்றார், மாணவர்.பேச நாவெழாத நிலையில், 'கேள்...' என்று பேராசிரியர் சைகை காட்ட...'உலகில் இருள் என்ற ஒன்று உண்டா...' என்றார்.'உண்டே...' என்று, பேராசிரியர் மென்று விழுங்க...'மறுபடியும் தவறாக பதிலளிக்கிறீர்... உலகில், இருள் என்று ஏதுமில்லை. வெளிச்சம் மங்கி, முழுவதுமாக இல்லாது போகும் நிலையே இருளாகும்... அதனால் தான் நாம், 'லைட் அண்டு ஹீட்' பற்றி படிக்கிறோம்... 'குளிரை பற்றியோ, இருளை பற்றியோ படிப்பதில்லை... இதே போல தான் சாத்தான் என்றோ, கெட்டவை என்றோ ஏதுமில்லை... மனதில் உண்மையான அன்பும், நம்பிக்கையும், கடவுள் மீது அசைக்க முடியாத பற்றும் கொள்ளாத நிலையே, 'ஈவிள்' எனப்படுகிறது...' என்றார், மாணவர்.விளக்கத்தை கேட்ட, ஆசிரியர் மற்றும் மாணவர்கள், அவரை பாராட்டினர்.அந்த மாணவர், விவேகானந்தர். தான் வாழ்ந்த, 32 ஆண்டுகளுள், இந்து மதத்தின் உயர்வை, உலகுக்கு பறைசாற்றியவர்.ஜன., 12, 1863ல் பிறந்து, ஜூலை, 4, 1902ல், உயிர் நீத்தார்.அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த உலக சமய மாநாட்டில், இவர் ஆற்றிய உரை, உலக வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து: உலக புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர், முகமது அலிக்கு, 'மேஜிக்' வித்தைகள் தெரியும். இதனால், அடிக்கடி லண்டனுக்கு வந்த இவரை, 'பிரிட்டிஷ் மேஜிகல் சொசைட்டி' உறுப்பினராக சேர்த்துக் கொண்டது. மேஜிக் நிபுணர்கள், தாங்கள் செய்யும் வித்தைகளின் ரகசியத்தை வெளிப்படுத்தக் கூடாதென்று பிரமாணம் செய்து கொள்வர். இதற்கு எதிராக, அதன் ரகசியத்தை மக்களிடையே வெளிப்படையாக செய்து காட்டினார், முகமது அலி.விதிகளுக்கு மாறாக, முகமது அலி செய்யும் முறை, மேஜிகல் சொசைட்டியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், உறுப்பினர் பதவியிலிருந்து அவரை நீக்கி விட்டனர்.
நடுத்தெருநாராயணன்

