
தீபங்களில் ஒளியால் ஜொலிப்பது, தீபாவளி. கூடுதல் கவர்ச்சியாக, பட்டாசு வெடிப்பதும் நடக்கிறது.
உலகில் முதன் முதலாக தபால் தலை வெளியிட்ட நாடு, பிரிட்டன். 1840ம் ஆண்டு வெளியிட்டது. முதன் முதலில் பசை தடவி வெளியிட்ட பெருமையும், அந்நாட்டிற்கே உண்டு. தபால் தலைகளில், நாட்டின் பெயரை வெளியிடாததும், பிரிட்டன் தான்.
* இந்தியாவில், 1854ம் ஆண்டு முதல் தபால் தலை வெளியானது, இதை கல்கத்தாவில், லார்ட் டல்ஹவுசி வெளியிட்டார்
* இந்தியா சுதந்திரம் பெற்ற பின், 1947ல், மூன்று தபால் தலைகளை வெளியிட்டது. அவற்றில் அசோக் பில்லர், தேசிய கொடி மற்றும் ஒரு விமானம் இடம்பெற்றது
* அமெரிக்காவில், 1847ல், முதன்முதலில் தபால் தலை வெளியிடப்பட்டது. அங்கு காலாவதி என்பதே கிடையாது. அந்த ஆண்டு வெளியிட்ட தபால் தலையை, இப்போதும் ஒட்டி அனுப்பலாம்
* கடந்த, 1947ல் துவங்கி இன்று வரை, 3000த்திற்கும் அதிகமான தபால் தலைகளை இந்தியா வெளியிட்டுள்ளது
* தென்னிந்தியாவில், குறிப்பாக, தமிழகத்தில், ஒருநாள் தீபாவளி; வட மாநிலங்களில், ஐந்து நாள் தீபாவளி. தீபாவளிக்கென்றே இந்தியா, தீபாவளி சிறப்பு தபால் தலைகளை, பல்வேறு விலைகளில் வெளியிட்டுள்ளது
* தீபாவளியை முன்னிட்டு, பல நாடுகள் தீபாவளி சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டுள்ளன. அவை, ஆஸ்திரேலியா, பிஜி, கயானா, இஸ்ரேல், சிங்கப்பூர், இந்தோனேஷியா, மலேசியா, இலங்கை மற்றும் அமெரிக்கா என, கூறிக்கொண்டே போகலாம்
* அமெரிக்கா, தீபாவளி சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டபோது, அதை, 1.70 லட்சம் பேர் வாங்கினர்.
ஒரு குறிப்பிட்ட தபால் தலை மிக அதிகம் விற்பதில், தீபாவளி தபால் தலைக்கும் முக்கிய இடம் உண்டு என, அமெரிக்கா அறிவித்துள்ளது
Deepavali stamp around the world என googleல் பதிவு செய்தால், அனைத்து தபால் தலைகளையும் காணலாம்!
- நடுத்தெரு நாராயணன்

