தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜன 15, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜன., 17 - எம்.ஜி.ஆர்., பிறந்தநாள்



சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்., நுாலிலிருந்து:

பொதுவாக, பதிவுத் தபால்களைக் கையெழுத்திட்டுப் பெற மாட்டார், எம்.ஜி.ஆர்., அதற்கு ஒரு காரணம் உண்டு. அவரது, நாடோடி மன்னன் திரைப்படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன், அவருக்கு பதிவுத்தபால் ஒன்று வந்தது.

கையெழுத்திட்டுப் பெற்று, பிரித்துப் பார்த்தால், அதில், வெற்றுக் காகிதம் மட்டுமே இருந்தது. பின்பு, அதை மறந்து, பட வேலைகளில் மூழ்கினார். பின்னாளில், நாடோடி மன்னன் படம் வெற்றி பெற்று, திரையரங்குகளில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தது.

அப்போது, அவருக்கு, ஒரு வக்கீல் நோட்டீஸ் வந்தது. பிரித்துப் பார்த்தால், முன்பு பதிவுத்தபால் அனுப்பியவரின் சார்பாக அனுப்பப்பட்டிருந்தது.

அதில், 'நாடோடி மன்னன் கதை, என்னுடையது. அதை, உங்களுக்கு பல மாதங்களுக்கு முன் அனுப்பி வைத்தேன். ஆனால், படத்தில் என் பெயர் இல்லை. அதனால், அதற்கு, எனக்குரிய நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும்...' என்றிருந்தது.

அதிர்ந்து போனார், எம்.ஜி.ஆர்., பிறகு, தம் வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பி விட்டாலும், 'இப்படியெல்லாம் கூடவா செய்வர்...' என ஆச்சர்யமாகி, அதன்பின், சந்தேகம்படும்படியான பதிவுத் தபால்களைக் கையெழுத்திட்டுப் பெறுவதைத் தவிர்த்தார்.

***

கட்சி துவங்கி, ஆட்சியில் அமர்ந்தபின், எத்தனையோ கருத்து வேறுபாடு இருந்தாலும், சட்டசபை நடைபெறும் நாட்களில், கருணாநிதியை நலம் விசாரிப்பார், எம்.ஜி.ஆர்., பெரும்பாலும், தன் எதிரில், சீனியர்களைத் தவிர, மற்றவர்களை கருணாநிதி என்று பெயர் சொல்லிக் குறிப்பிடுவதை விரும்ப மாட்டார், எம்.ஜி.ஆர்.,

***

எம்.ஜி.ஆருக்கு, சென்னைப் பல்கலைக்கழகம், டாக்டர் பட்டம் கொடுத்ததை, சட்ட மன்றத்தில் விவாதப் பொருளாக்கி, கடுமையாக எதிர்த்துப் பேசினார், தி.மு.க., உறுப்பினர், துரைமுருகன்.

தேநீர் இடைவேளையில், துரைமுருகனை அழைத்த கருணாநிதி, 'எம்.ஜி.ஆரை ஆயிரம் விஷயங்களுக்காக நான் எதிர்க்கலாம், விமர்சிக்கலாம். ஆனால், நீ அதைச் செய்வது ஏற்புடையதல்ல. நன்றி மறக்காதே...' என, கடிந்து கொண்டார்.

அதோடு, 'எம்.ஜி.ஆர்., மீது நமக்கு ஆயிரம் மாச்சர்யங்கள் இருந்தாலும், அவரது வள்ளல் குணத்தை, நாம் குறை சொல்ல முடியாது. அந்த ஒரு விஷயத்துக்காக, அவருக்கு, டாக்டர் பட்டம் கொடுத்ததை ஏற்கலாம்...' என்று, அந்தப் பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைத்தார்.

***

திரையுலகில் தான் பங்கேற்ற அத்தனை துறைகளிலும் சாதனை புரிந்த, எம்.ஜி.ஆருக்கு, தன் இறுதிக்காலம் வரை, ஒரு குறை இருந்தது. அது, கல்கி எழுதிய, 'பொன்னியின் செல்வன்' நாவலை, திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது.

கிட்டத்தட்ட, மூன்று முறை அதற்கான ஆயத்தப் பணிகளைத் துவக்கி, ஆரம்ப நிலையிலேயே நின்று போனது. படம் எடுத்தால், அதில், தான் வந்திய தேவனாகவும், குந்தவி கேரக்டரில், பிரபல இயக்குனர் சுப்ரமணியத்தின் மகளும், நாட்டியக் கலைஞருமான, பத்மா சுப்ரமணியத்தை நடிக்க வைக்கவும் திட்டமிட்டார், எம்.ஜி.ஆர்., இறுதி வரை அது நிறைவேறவில்லை.

- நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us