தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பொங்கல்!

பொங்கல்!

பொங்கல்!


PUBLISHED ON : ஜன 15, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாரத்தில் ஒருநாள் பொங்கல் சாப்பிடணும்:

கடைகளில், அதிக எண்ணெய், வனஸ்பதி ஊற்றுவதாலேயே பொங்கலை, 'ஹெவி' உணவாக பலரும் கருதுகின்றனர். உண்மையில், பொங்கல் ஒரு ஆரோக்கியமான உணவு.

பொதுவாக, பொங்கல் என்ற வார்த்தையை உச்சரித்தாலே, வெண் பொங்கல் தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், தைத் திங்கள் என்றால், சர்க்கரைப் பொங்கல் தான் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

இவ்விரண்டு பொங்கலையும் அனைவரும் சாப்பிடலாம். அதிலும், வெண் பொங்கல் சமச்சீரான, ஆரோக்கியமான உணவு; சிறந்த காலை சிற்றுண்டியும் கூட.

அரிசியில் கார்போ ஹைட்ரேட்டும்; பாசிப் பருப்பால், புரோட்டினும்; மிளகு, சீரகம், பெருங்காயம் உள்ளிட்டவையால், 'மைக்ரோ நியூட்ரியன்ஸ்' சத்துகளும்; முந்திரி, இஞ்சி மற்றும் கறிவேப்பிலையால் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சத்துகளும்; பசு நெய்யால் நல்ல கொழுப்பும் ஒரே உணவின் மூலம் நமக்கு கிடைக்கின்றன.

அதனாலேயே வெண் பொங்கல், ஒரு சமச்சீரான உணவாக கருதப்படுகிறது. தவிர, நார்ச்சத்தும், வைட்டமின் சத்துகளையும் வெண் பொங்கல் நமக்கு தருகிறது.

நன்கு வேக வைத்த பொங்கல், மிகவும் எளிதில் செரிமானமாகும் தன்மை கொண்டது. வெண் பொங்கலானது, நம் உடலை குளிர்விக்கும் ஓர் உணவு என்று, யோகக் குறிப்புகள் சொல்கின்றன.

வயிற்றுப் புண்ணை ஆற்றும், குடலை சுத்தப்படுத்தும், நெஞ்செரிச்சலை சரி செய்யும். பாலுாட்டும் தாய்மார்களுக்கு, நன்கு பால் சுரக்க வைக்கும்; வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றும். வயிற்று உப்புசம், வயிற்று வலியை சரி செய்யும்.

மூட்டு வலி, ஒற்றைத் தலைவலி உள்ளிட்டவை வராமல் தடுக்கும். புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருட்கள், உடலில் தங்காமல் நீக்கும். குறிப்பாக, பெண்களுக்கு, சினைப்பையில் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழித்து விடும்.

காலையில், வெண் பொங்கல் சாப்பிடுவதால், உடலுக்கு நல்ல எனர்ஜி கிடைக்கும். தசைகள் வலுப்பெறும். குடல் பகுதியை அரிக்காமல் காக்கும். ரத்த சோகை வராமல் தடுக்கும். முடி நன்கு வளர உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஞாபக மறதியை சரி செய்யும். மூளையில் உள்ள செல்கள் மற்றும் நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

குளிர் காலத்தில், பொங்கல் சாப்பிட்டால், பனியாலும், குளிராலும் ஏற்படும் சரும வறட்சியை தடுத்து, சருமத்தை மிருதுவாக்கும். இருமலையும் சரி செய்யும்.

பொங்கலை, சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். பொங்கலில் அரிசியுடன் பாசிப் பருப்பும் சேர்க்கப்படுவதால், அது ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

* சர்க்கரை பொங்கலில் சேர்க்கப்படும் ஏலக்காய், வாசனைக்கு மட்டுமல்ல, உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.* வயதின் முதிர்ச்சியை தாமதப்படுத்தும். சருமத்தில் சுருக்கம் ஏற்படுதல், கண் உள்ளே சென்று குழியாவது, மூட்டுத் தேய்மானம் உள்ளிட்டவை வராமல் தடுக்கும்.* வயிற்றில் உள்ள அமிலச் சுரப்பை சீராக்கும். அடிபட்ட புண் விரைவாக ஆறவும் வழிவகுக்கும். பசியைத் துாண்டும். உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பைத் தரும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.

- எஸ். மணிபாரதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us