PUBLISHED ON : செப் 18, 2011

சீனாவில் தற்போது புதிதாக திருமணம் ஆகும் இளம் ஜோடிகள், திருமணமாவதற்கு முன், வித, விதமான போஸ் களில், நிர்வாணமாக புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளும் ஒரு விசித்திரமான கலாசாரம் உருவாகியுள்ளது. இதற்கு சீன அரசின் சட்டமும் அனுமதி அளித்துள்ளது.
ஆரம்பத்தில், வசதி படைத்த குடும்பங்களில் மட்டுமே அரங்கேறிய இந்த கலாசாரம், தற்போது படிப்படியாக நடுத்தர குடும்பத்தினரிடையேயும் பின்பற்றப்படுகிறது. திருமணம் நிச்சயம் ஆனதும், புதுமணத் தம்பதிகள், இதற்காக ஸ்டார் ஓட்டலில் உள்ள அறையை, 'புக்' செய்து விடுகின்றனர்.
நீர்வீழ்ச்சி, பூங்கா, அழகான கட்டடங்கள் ஆகியவற்றின் பின்னணியுடன், அந்த அறை யில் அலங்காரங்கள் செய்யப் படுகின்றன. இதற்காகவே, கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுகின்றனர். இதன்பின், ஸ்டுடியோக்காரர்களை வர வழைத்து, புதுமணத் தம்பதியர், வித, விதமாக, நிர்வாண கோலத்தில் அமர்ந்து, புகைப் படங்கள் எடுத்துக் கொள் கின்றனர்.
சமீபகாலமாக, இவ்வாறு எடுக் கப்படும் புகைப்படங்கள், இணைய தளங்களில் வெளி யாகும் விபரீதமும் நடக்கிறது. இந்த விவகாரம், சம்பந்தபட்ட புதுமணத் தம்பதிகளை மட்டுமல் லாமல், ஒட்டு மொத்த சீன சமுதாயத்தையுமே, அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
எனவே, 'புதுமணத் தம்பதிகள் நிர்வாண கோலத்தில் புகைப் படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்...' என, சமூக அமைப்புகள் போர்க்கொடி தூக்கி யுள்ளன.
— ஜோல்னா பையன்.