PUBLISHED ON : ஏப் 09, 2023

அ நிறம் | அளவு
உண்மை ஒய்யாரமாய்
பொய் செருக்கு
ஒழித்து
மங்களம்
நீண்டதொரு
நிகழ்ச்சி நிரலாக்க
வரும்
சோப கிருது வருக!
ஒளி அழகில்
ஒளிந்திருக்கும் கர்வம்
ஒரு மனதாய் அகன்று
மனிதர் யாவரும்
ஆசீர்வதித்துக்கொள்ள
வரும்
சோப கிருது வருக!
நிலம்
நீர்
காற்றை பதுக்காமல்
பொதுவாய்
ஒருங்கிணைத்து
ஒய்யாரமாய்
மனிதகுலத்தை மாற்றும்
மங்கள
மாங்கல்யமாக
வரும்
சோப கிருது ஆண்டு!
ஒளி மாயமில்லாத
ஒளிமயமான எதிர்காலத்தை
அழகு ஓவியமாக
அச்சாணியால் திருத்தி
ஆணவக்குறியீடு
அடையாளம் கண்டு
அடிக்கோடிட்ட
சிவப்பு மையால்
சிதறடித்து
சகிப்புத் தன்மையை
வீட்டிற்கு ஒரு மரமாய்
உரம் போட்டு
வளர்த்திட வரும்
சோப கிருது புத்தாண்டை
வரவேற்போம்!
சு. பிரபாகர், வில்லாபுரம், மதுரை.
