தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : அக் 13, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வலி

* பெண் விடுதலை பேசும்

புண்ணியவான்களே...

எங்களுக்கு

அடிமைச் சங்கிலி பூட்டிய

விடுதலை வேண்டாம்!

* பின் தூங்கி

முன் எழுந்து

கடமைகளை செய்தாலும்

கிடைப்பதென்னவோ,

'மூதேவி' பட்டம் தான்!

* சரிநிகர் சமானமாக

சம்பாதித்தாலும்

எஞ்சியதென்னவோ,

'சனியன்' மட்டும் தான்!

* தோள் கொடுத்தால்

சுமை குறையும்

என நினைத்தோம்...

அந்தோ பரிதாபம்

சுமை தாங்கும் கல்லாகவே

மாறி விட்டோம்!

* பிடித்த, 'சேனல்'

'பிடி' சோறு

எல்லாமே...

இன்றைக்கும்

எங்களுக்கு கானல் நீரே!

* போதும்...

உங்கள் பரிந்துரைகள்!

* மீண்டும் நாங்கள்,

அடுப்பூதிக் கொண்டே

அறியாமை இருளில்

மூழ்கி விடுகிறோம்!

* அப்போதாவது

சுமை தாங்கும்

எங்கள் தோள்களின்

வலி(மை)யை

ஆண் வர்க்கம் உணரட்டுமே!

ஆர்.மீனா, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us