
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனதால்....
அன்புத் தாயே!
மரணத்தின் கதை கேளாய்...
என்
திரும(ர)ணக் கதை கேளாய்!
வாயைக் கட்டி,
வயிற்றைக் கட்டி,
உதிரம் சிந்தி
உழைத்த உழைப்பெல்லாம்
விழலுக்கு இறைத்த
நீராகி விட்டதம்மா!
ஐந்து காசு பெறாதவனுடன்
அட்சதை தூவி
அனுப்பி வைத்தாய் என்னை
அவன்
ஆண்பிள்ளை என்றதனால்...
அரை லட்சம்
சம்பாதித்தும்,
அடிமை வாழ்வு
வாழ்கிறேன் என்பதை
நீ அறிவாயோ?
மீண்டு வர வழியில்லை
மீட்டெடுக்க யாருமில்லை
மீளா உலகம் - நீ
சென்றதனால்!
உயிருள்ள சடலமா
உலா வருகிறேன்...
மனதால்
மரித்து விட்டதனால்!
- ஆர்.மீனா, மதுரை.

