
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வல்லரசை காண்போம்!
சுதந்திரப்
பெட்டகம்
சூறையாடப்படுகிறது
அரசியல் களம்
சக்களத்தி
வீடுகளாய் மாறிப்போனது!
அடிமைத்தளை
ஒழித்தவர்கள்
அன்றையத் 
தலைவர்கள்...
இன்றோ நாம்
சுதந்திர
நாட்டின் அடிமைகளானோம்!
தலைவர்களின்
சிலைக ளெல்லாம்
சாலைகளில்...
அவரின்
கொள்கைகளோ
சந்திகளில்!
கட்சிகளின்
கொடிகளால்
தேசியக்கொடியின்
கம்பீரம்
தொலைந்து போனது!
காவி
தியாகத்தின்
அடையாளம்...
இன்று
அதுவெறும்
வர்ண ஜாலமாயிற்று!
வெள்ளை
தூய்மையின்
அடையாளம்...
இன்று
பொய்மையின்
வர்ணமாயிற்று!
இன்றைய அரசியல் பெருமை
ஆள்வதில் இல்லை
ஆட்படுத்துவதில்தான் உள்ளது!
இயற்கை வளத்தில்
இயற்கையைப் போற்றுவதில்
கூட்டணியில்லா
மக்களாட்சி மகத்துவத்தில்
இனி வரும் நாட்கௌல்லாம்
வளர்ச்சி பெறும்
வல்லரசு நாட்களாகட்டும்!
— தேவா,திருவொற்றியூர்.

