தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : செப் 14, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 14, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாயத்தடி....!

* மாயத்தடியொன்று வேண்டும்...

மானிடப் போர்வையில்

மாபாவம் புரிந்திடும் மதியிழந்தோரின்

மண்டையைப் பிளக்க!

* சாதிக்க வழியற்ற

ஆதிக்க வெறிபிடித்த

ஜாதியே வேதமெனும்

சாத்தான்களை

சாத்து சாத்தென்று சாத்த!

* பெண்ணைக் கரம் பிடிக்க

பொன், பொருள் மீது பற்று வைத்து

பேரம் பேசும் பசங்களை

நாலு போடு போட!

* உழைத்துப் பிழைப்பதில்

உடன்பாடற்று

ஏய்த்துப் பிழைத்திட

இறைவனின் பெயரை

பயன்படுத்தும் கயவர்களின்

கடைவாயில் இடிக்க!

* பாலூட்டி வளர்த்தவளை

பட்டினி போட்டு

அபிமான நடிகனின்

உருவ பொம்மைக்கு

பாலாபிஷேகம் செய்யும்

ரசிகனின் நகக்கண்களை நசுக்க!

* தீர்வு காண இயலாத

ஏராளமான பிரச்னைகளை

நேருக்கு நேராய் தடி கொண்டு

தகர்க்க முடியாதென்பதால்

வீழ்ந்து வரும் என் தேசத்தின் தோள்களை

இயன்றளவேனும் தாங்கிப் பிடிக்க

மாயத்தடியொன்று வேண்டும்!



— கா.இளையராஜா, விருத்தாசலம்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us