PUBLISHED ON : நவ 09, 2014

அ நிறம் | அளவு
போராட்டம்!
மாநிலங்களைப் பிரித்தாலும்
போராட்டம்
பிரிக்காவிட்டாலும்
போராட்டம்!
நதி நீரை
திறந்தாலும் போராட்டம்
திறக்காவிட்டாலும்
போராட்டம்!
அணுநிலையத்தை
இயக்கினாலும் போராட்டம்
இயக்காவிட்டாலும்
போராட்டம்!
சேதுக் கால்வாய்திட்டம்
துவங்கினாலும் போராட்டம்
துவங்கா விட்டாலும்
போராட்டம்!
கொலைக் குற்றவாளிகளை
தூக்கில் போட்டாலும் போராட்டம்
போடா விட்டாலும்
போராட்டம்!
இந்தி மொழியை
திணித்தாலும் போராட்டம்
திணிக்கா விட்டாலும்
போராட்டம்!
ராமர் கோவிலை
கட்டினாலும் போராட்டம்
கட்டாவிட்டாலும்
போராட்டம்!
ஊழல் தலைவர்களுக்கு எதிராக
தண்டனை தந்தாலும்
போராட்டம்
தண்டனை
தராவிட்டாலும்
போராட்டம்!
இதில் எதிலும் சேராத மக்கள்தான்
வாழ்க்கையே போராட்டமாக
போராடி அமைதியாக
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் இங்கு!
— ஏ.வி.கிரி, சென்னை.
