
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்மில் ஒருவராய்...
பிரம்மனின் படைப்பில்
பிழையாகிப் போனவர்கள்
இவர்கள்!
உருவத்திற்கும்
உணர்ச்சிக்கும்
உருவான
உணர்வுப் போராட்டத்தில்
உடை மாற்றிக் கொண்டவர்கள்
இவர்கள்!
கூத்தாண்டவர் கோவிலில்
கூடி மகிழ்ந்தாலும்
உள்ளக் குமுறலோடு
குறைவாழ்க்கை வாழ்பவர்கள்
இவர்கள்!
உறவுகள் உதறியபின்
உலர்ந்த உள்ளத்துடன்
உலகை வலம் வருபவர்கள்
இவர்கள்!
பரிதாபத்திற்கும்
பரிகாசத்திற்கும்
உரியவர்கள் அல்ல
இவர்கள்!
திருநங்கை எனும்
திருநாமம் கொண்ட
இவர்களும்
மானுடப் பிறவிகளே!
மதிப்போம்
இவர்களின் உணர்வுகளை...
ஊக்குவிப்போம்
இவர்களின் திறமைகளை...
வாழ வைப்போம்
இவர்களை
நம்மில் ஒருவராய்!
— எஸ்.ஆர்.சாந்தி, மதுரை.

