PUBLISHED ON : ஜூலை 03, 2016

அ நிறம் | அளவு
முடிவில் தெரியும்!
திக்கு தெரியாது
என் மன காட்டில்
பயணிக்கிறேன்...
வருவது வரட்டும் என்றால்
எதிரே வருவது என்னவாக இருக்கும்
என்றே அச்சம் எனக்கு...
மிரட்டும் சூழல்
இருளா, நிழலா
புரியாது இறுக கண்ணை
மூடிக் கொள்கிறேன்...
இரைச்சல் சந்தேகத்தையும்
அமைதி அச்சத்தையும் தர
இதயம் படபடக்கிறேன்...
நம்பிக்கையை பற்றி தான்
நடக்கிறேன் - அதற்கு
கடவுள் என்றும்
பெயரிட்டுக் கொள்ளலாம்!
கணக்குமல்ல, புதிருமல்ல
வாழ்க்கை என்பது ஒன்றுமல்ல
கண்டுகொண்டேன்!
முடிவில் தானே தெரியும்
பாதை சரியானதா என்று
அதற்குள் என்ன அவசரம்
தீர்ப்பு கூற!
— சி.கலாதம்பி, சென்னை.
