PUBLISHED ON : நவ 27, 2016

அ நிறம் | அளவு
வலிகள் வேண்டும்!
வலிகள் தான்
நிவாரணிகளின் ஊற்று
வலிகளே
தேடல்களின் வித்து!
பிரசவத்தின் வலி
பரவசத்தின் வரவு
கல்வியின் வலி
வெற்றியின் செலவு!
முயற்சியின் வலி
எழுச்சியின் ஒளி
பயிற்சியின் வலி
வளர்ச்சியின் படி!
தேடலின் வலி
புதுமையின் உள்ளீடு
படிப்பின் வலி
படைப்புகளின் வெளிப்பாடு!
ஆய்வின் வலி
அரியன தோன்றல்
உளியின் வலி
கல்லில் சிற்பம்!
சிந்தனையின் வலி
சாதனையின் பிறப்பு
அறிவின் வலி
ஆளுமையின் சிறப்பு!
கற்றலின் வலி
ஆற்றலின் வரவினம்
அனுபவங்களின் வலி
ஞானத்தின் உயிர்ப்பு!
சோம்பலின் வலி
சுகத்தின் கேடு
உழைப்பின் வலி
உயர்வுக்கு வழி!
இளமையில் வலி
முதுமையில் சுகம்
முதுமையில் வலி
முடிவின் துவக்கம்!
வலியின்றி
வலிமையில்லை
வலிகள் இல்லாமல்
வலி நிவாரணிகள் இல்லை!
வலிகள் வேண்டும்...
வலிகளே
நம்மை உச்சத்திற்கு
கொண்டு செல்லும்
ஊர்தி!
— எஸ். முருகேச பாண்டியன்,
ஆனையூர்
