PUBLISHED ON : ஜன 08, 2017

அ நிறம் | அளவு
யாரோ ஒருவனுக்கான நேசம்!
இடைவெளி விட்டு
தொடுத்த பூக்கள்
அழகாகத் தான் இருக்கின்றன!
விட்டு விட்டு
தனித்து வரும் அலையில்
எந்தக் குறையுமில்லை!
சிறகு விரித்து மிதக்கும்
ஒற்றை பறவை
உணர்த்துகிறது
வாழ்வின் ரகசியத்தை!
ஊருக்கு வழிகாட்டி
விலகி நிற்கும்
மைல் கற்களில்
புதைந்து கிடக்கிறது
யாரோ ஒருவருக்கான நேசம்!
தனித்து ஒளிரும்
நிலவை விடவும்
வேறெதுவும் தோன்றவில்லை
உலகில் அழகாய்!
இடைவெளிகள்
தீர்மானிப்பதில்லை
ஒருபோதும்
நம் நெருக்கத்தை!
- இ.எஸ்.லலிதாமதி,
சென்னை.
