தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜன 22, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடத்தல்!

அடிக்கடி நடைபெறுகிறது

விமான நிலையங்களிலும்

பல வழிகளிலும்

தங்கக் கடத்தல்!

கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்

அளவிற்கு

கடத்தல்களும்

அதிகரிக்கின்றன!

தங்கம் மட்டுமா

கடத்தப்படுகிறது...

நட்சத்திர ஆமைகள்

தங்க மீன்கள்

போதை பொருட்கள்

ஆற்று மணல்கள்...

கிரானைட் கற்கள்

செம்மரங்கள்

சந்தன மரங்கள்

சிலைகள்...

பொருட்கள் மட்டுமே

நமக்கு தெரிகிறது

விமானம் ஏறும் பொறியாளர்

மருத்துவர்கள், விஞ்ஞானிகள்

கணினி வல்லுநர்கள்...

இவர்களும்

ஒரு விதமாக

கடத்தப்படுபவர்கள் தானே...

இது பற்றி யார்

கவலைப்படுகின்றனர்...

வெளிநாட்டு மோகம்

யாருக்கு தான் இல்லை!

வெளிநாட்டிற்கு போய் வரும்

அதிகாரிகள், அரசியல்வாதிகள்

ஆட்சியாளர்கள், தலைவர்கள்

கடத்தி வர வேண்டியதுதானே...

அங்குள்ள சுத்தம், சுகாதாரம்

நேரம் தவறாமை, பண்பாடு

வேளாண் உற்பத்தி

அறிவியல் வளர்ச்சிகளை!

'சொல் கேளான்' ஏ.வி.கிரி,

சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us