PUBLISHED ON : மார் 12, 2017

அ நிறம் | அளவு
வாழ்க்கை வாழ்வதற்கே!
அவசரமாய் வாழ்ந்து
இறந்து போவதற்கு
வாழ்க்கை என்ன
ஓட்ட பந்தயமா...
பரபரப்பை கொஞ்சம்
ஒத்தி வையுங்கள்
மனம் நிறைய பேச
காத்திருக்கிறது உறவுகள்!
இன்னொரு பிறப்பில்
அவ்வளவு நம்பிக்கையா
இந்த வாழ்க்கையை
விரயம் செய்கிறீர்...
கசப்பும் சுவை தான்
ருசித்து பாருங்கள்
தோல்வியும் சுகம் தான்
ரசிக்க பழகுங்கள்!
நீங்கள் தான் பிரம்மா...
சொர்க்கமா, நரகமா
எதை உருவாக்க
போகிறீர்கள்?
- செல்வ மதி, வந்தவாசி.
