PUBLISHED ON : ஏப் 09, 2017

அ நிறம் | அளவு
வசந்த சித்திரையே வருக!
வசந்த சீர் கொண்டு
வருகிற சித்திரையை
வரவேற்போம்!
புத்தாண்டு சித்திரை
புதுக்கணக்கு துவங்கும் மாதம்
புதுவாழ்வு சித்திரையாள்
பொழிய வரும் காலம்!
கோடை மழை
பொழிந்து
குற்றால நீர் அருவியாய்
கொட்ட வரும் காலம்!
மாமரத்து கனி குலுங்கி
சுவையூட்டும் காலம்
வேரில் பழுத்த பலா
வீதி வரும் காலம்!
வாசமல்லி பூ மலர்ந்து
மணம் பரப்பும் காலம்
வெள்ளரி பழம் பழுத்து
விற்க வரும் காலம்!
விஷு கனி கண்டு
களிக்கின்ற காலம்
வசந்த ருது துவங்கும்
சித்திரை மாதம்!
வசந்த சித்திரை புத்தாண்டே வருக...
வளவாழ்வு எல்லார்க்கும்
வசமாக அருள்க!
— ஞா. மாணிக்கவாசகன், சென்னை.
