PUBLISHED ON : ஜூன் 04, 2017

அ நிறம் | அளவு
தனிமனித ஒழுக்கம்!
நிதி நீச்சலடிப்பதால்
நீதி நின்று
தவிக்குது!
அதிகார வர்க்கம்
எதையும்
செய்ய துணிவதால்
அமைதி
அல்லல்படுகிறது!
இங்கே
பழக்க வழக்கங்கள்
பாழாய் போனதால்
தனிமனித ஒழுக்கத்தின்
தாலி அறுபடுகிறது!
காலில் விழுந்தால் தானே
காரியமாகிறது
இதில் மனிதநேயம்
எங்கே வாழ்கிறது?
இங்கே
நீதி நெறிகளை
பித்தலாட்டமாக பார்ப்பதால்
தனிமனித ஒழுக்கம்
தவிடு பொடியாகிறது!
காந்தி தேசம் என்கின்றனர்...
தேசமெங்கும்
பிராந்தி கடையை திறந்து
வாந்தி தேசமாக்கி விடுகின்றனர்!
தனிமனித ஒழுக்கம் எனும்
நாகரிகம் மலர்ந்தால்
காவல்துறை - நீதிதுறை
எண்ணிக்கையாவது குறையும்!
— ரெ.கயல்விழி, திருக்குவளை.
