PUBLISHED ON : ஜூலை 09, 2017

அ நிறம் | அளவு
ஏக்கம்!
உன்னை நினைத்து
விடுமுறையில் குதூகலிக்க
சொந்த ஊர் வந்தேன்!
ஓர் இரவில்
என்னைத் தழுவி
சில மணித்துளியிலேயே
மறைந்தாய்!
விட்ட குறை தொட்ட குறையாய்
உன் வாசம் சுமந்து
நகரம் நகர்ந்தேன்!
நானில்லாத நாட்களில்
வந்து போனதாய் கூறினர்
உன்னுடன் பயணித்த நாட்களில்
உன் அருமை தெரியவில்லை
கட்டி வைக்கவும் தோணவில்லை!
என்று தணியும் உன் கோபம்
எப்போது தீரும் என் தாகம்
நீ வந்ததும் உன்னை
உச்சி முகர்ந்து கொள்ள
காத்திருப்பது நான் மட்டுமல்ல
என் தாய்நாடும் தான்!
மழையே வருவாயோ...
உன் இதழ் துளி
எங்களுக்கு உயிர் துளி
நினைவில் கொள் போதும்!
ரா.நாஞ்சிலழகன், கன்னியாகுமரி.
