
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எல்லாம் பிறர்க்காகவே!
மலர்கள் பரப்பும்
நறுமணம்
மயக்க வைக்கின்றன
ஆனாலும்
மணம் முழுவதும்
சோலைகளுக்கு சொந்தமில்லை!
சுவை தரும் கனிகள்
நாவிற்கு விருந்தளிக்கின்றன
ஆனாலும்
கனிகள் முழுவதும்
மரங்களுக்கு சொந்தமில்லை!
நிலத்தில் விளையும்
தானியங்கள்
பசி போக்குகிறது
ஆனாலும்
அவை நிலத்திற்கு
சொந்தமில்லை!
குளத்தில் நிறையும்
மழைநீர்
தாகம் தீர்க்கிறது
ஆனாலும்
நிறைகின்ற
நீர் முழுவதையும்
கன்று குடிப்பதில்லை!
பசுவின் பால்
ஊட்டம் தருகிறது
ஆனாலும்
பால் முழுவதையும்
கன்று குடிப்பதில்லை!
பிறர் உழைப்பை
தனதாய் சொந்தம்
கொண்டாடுவோர்
இவை உணர்ந்தாவது
வெட்கி
தலைகுனிய வேண்டும்!
கே.லலிதா, மதுரை

