PUBLISHED ON : ஜன 21, 2018

அ நிறம் | அளவு
எது அவமானம்?
வீழ்வது அவமானமல்ல
வீழ்ந்தே கிடப்பது தான்
அவமானம்!
பொறுமை காப்பது
அவமானமல்ல
சோம்பலாய் இருப்பது தான்
அவமானம்!
கோபம் கொள்வது
அவமானமல்ல
காரணமின்றி கோபப்படுவது தான்
அவமானம்!
ஆசைப்படுவது
அவமானமல்ல
பேராசைப்படுவது தான்
அவமானம்!
பேசுவது ஒன்றும்
அவமானமல்ல
தேவையற்றதை பேசுவது தான்
அவமானம்!
அறியாமை ஒன்றும்
அவமானமல்ல
அறிந்துகொள்ள முயலாதது தான்
அவமானம்!
தவறு செய்வது
அவமானமல்ல
தெரிந்தும் திருத்திக் கொள்ளாதது தான்
அவமானம்!
வெ.பரமசிவன், சென்னை.
