PUBLISHED ON : பிப் 04, 2018

அ நிறம் | அளவு
வந்துவிடு வளைகரங்களுக்குள்...
நீ எனக்காக காத்திருக்கும்
அந்த தேநீர் கடை வாசலில்
இப்போதும் ஒரு குவளை
காத்துக் கொண்டிருக்கிறது!
உன் விழி பருகி
உரையாடி மகிழ்ந்த
தெருவின் வேப்ப மர நிழல்
இன்னும் அசைந்து
கொண்டுதான் இருக்கிறது
கூடுதல் இனிப்புடன்!
இருவருமாய் சேர்ந்து வலம் வந்த
கோவில் பிரகாரத்தின்
மணி இசைத்துக்
கொண்டு தான் இருக்கிறது
இப்போதும்!
நாம் இணைந்து நடக்கையில்
படிந்த காலடிச் சுவடுகள்
வரலாற்றுப் படிமங்களாய் தான்
பதுக்கி வைத்திருக்கிறது
அந்த கடற்கரை மணற்பரப்பு!
நீ தான்
என் ஞாபகங்களைத் தொலைத்து
தொடுவானத்துக்கு துார தெரியும்
வானவில்லாய் மாறிவிட்டாய்
என் வளை கரங்களுக்குள் வராமல்!
— இ.எஸ்.லலிதாமதி, சென்னை.
