PUBLISHED ON : பிப் 18, 2018

அ நிறம் | அளவு
நம்பிக்கையே உனக்கு நன்றி!
என்னை பகைத்தவர்களே
உங்களுக்கு நன்றி...
நான் வீழ்ந்தபோதெல்லாம் என்னை
எழ வைத்தவர்கள்
நீங்கள் அல்லவா!
எதிரிகளே உங்களுக்கு
என் நன்றி...
இடையூறுகளால் என்னை
உதை பந்தை போல்
உதைத்து உதைத்து
உயர வைத்தீர்கள்!
என் மீது ஏவப்பட்ட
அவமானங்களுக்கு நன்றி...
இன்றைய என்
வெகுமானங்களுக்கெல்லாம்
அடித்தளமிட்டது அதுதானே!
துப்பாக்கி தோட்டாக்களாய்
என்னைத் துளைத்தெடுத்த
தோல்விகளுக்கு நன்றி...
என் வெற்றிப் படிகளின்
முதற் படிகளல்லவா அவைகள்!
என்னை சோதித்த
சோதனைகளுக்கு நன்றி...
சோதனைகள் தானே
சாதனைகளின் வழித்தடம்!
எதிர்ப்புகளுக்கும்
இழப்புகளுக்கும் நன்றி...
என்னுள் இருந்த என்
மன வலிமையை எனக்கு
உணர்த்தியமைக்கு!
என் தன்னம்பிக்கையே
உமக்கு ஓராயிரம் நன்றிகள்...
நீ இல்லையேல்
நானும் இல்லை - என்
வெற்றிகளும் இல்லை!
செந்தலை நெப்போலியன்,
சென்னை.
