PUBLISHED ON : மார் 18, 2018

அ நிறம் | அளவு
இயற்கையின் மொழிகள்!
ஒவ்வொரு நாளும்
மறைந்தாலும்
தோன்றிக் கொண்டேதான்
இருக்கிறது சூரியன்!
அதன்
ஒளிக்கீற்றுகளும்
சொல்லித்தான்
தருகிறது
நம்பிக்கையை!
மேகத்திலிருந்து
விழும் மழைத் துளிகளும்
சொல்லியபடிதான்
பெய்கிறது
பாசத்தோடு
தாய்மையையும்!
எங்கிருந்தோ
பறந்து வரும்
சிட்டுக்குருவி கூட
சொல்லித்தான் தருகிறது
சுறுசுறுப்பை!
செடியில்
மலர்ந்திருக்கும்
பூக்களும்
சொல்லித்தான்
மரணிக்கிறது
சிரிப்பை!
எல்லாவற்றையும்
பார்க்கும்
மனிதனுக்குதான்
புரிவதே இல்லை
இயற்கையின்
மொழிகள்!
— ர.சம்பத்குமார், பொள்ளாச்சி.
