PUBLISHED ON : ஏப் 22, 2018

அ நிறம் | அளவு
இல்லையென ஆகிவிடுமா?
கண்களுக்கு தெரிவதில்லை
என்பதாலேயே அது
இல்லையென ஆகிவிடாது!
காற்றில் கலந்து வரும்
நறுமணத்திற்கு உருவமில்லை...
ஆனாலும், அதை நாம்
முகர்ந்து அனுபவிக்கிறோம்!
வாடைக் காற்றுக்கு
உருவமில்லை...
உடல் சிலிர்ப்பதிலிருந்து
உணர்ந்து கொள்கிறோம்!
ஒலிக்கு உருவமில்லை...
மெல்லிசையை
செவிப் புலனால்
அனுபவித்து மகிழ்கிறோம்!
ஒளிக்கும் உருவமில்லை...
கண்களை கொண்டே
வெளிச்சத்தில் அழகை
கண்டு மகிழ்கிறோம்!
அவ்வளவு ஏன்...
மனிதர்களையும்
எல்லா ஜீவராசிகளையும்
இயங்க வைக்கும்
உயிருக்கே உருவமில்லை!
இப்போது சொல்லுங்கள்...
கண்களுக்கு தெரிவதில்லை
என்பதாலேயே, கடவுள்
இல்லையென்று ஆகிவிடுமா?
— என்.கிருஷ்ணமூர்த்தி,
மதுரை.
