தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : செப் 02, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவர்கள்!

எழுதுகோலும்

எழுத்தும் மட்டுமல்ல

எழுத்தறிவிப்பதால்

இறைவன் ஆகின்றனர்

அவர்கள்!

ஆறாம் அறிவை

இயக்கும் சக்தி

அவர்கள் கைகொள்ளும்

அறிவின் யுக்தி!

பச்சை களிமண்ணாக

பள்ளிக்குள் நுழைபவர்களை

உச்சம் தொடும் வண்ணம்

உயர்த்துவது, அவர்கள்!

வகுப்பறை என்று

வர்ணிக்கப்படுவதை

பேதங்கள் பாராத

கருவறையாக்கும் கடவுளர்

அவர்கள்!

எழுதுகோல் பிடிக்கவும்

எழுத்தை வடிக்கவும்

அவர்கள் கற்றுத்தருவது

கைகளுக்குதான் என்றாலும்

நிமிர்ந்து நிற்பனவோ

தலையும், கால்களுமே!

தன்னம்பிக்கையால் உரமும்

நல் நம்பிக்கையால் தரமும்

தருவதில் தயாசீலர்கள்!

வாக்கு கற்றதால் வாத்தியார்கள் மட்டுமல்ல

மாணவர்களின் மனப்போக்கும் கற்றதால்

மகா புருஷர்களாய் மதிக்கப்படுபவர்கள்!

கற்ற கல்வியால் உற்ற வேலை பெற்று

கை நிறைய கரன்சி பெறுகையில்

ஒவ்வொருவராலும்

பெற்ற தாயினும்

பெரிதும் நினைக்கப்பட வேண்டியவர்கள்!

ஏனெனில் -

அவர்கள்

நம் அறிவுக் கண் திறந்து வைத்து

அக இருள் நீக்கியதால் தான்

அவனியில் பெருமையாய் உலா வருகிறோம்!

தலை நிமிர்ந்து நிற்க

திருவருள் புரிந்த குருமார்களை

மண்ணில் உள்ள காலம் வரை

மனதில் வைத்து துதிப்போம்!

— ஆர்.ஸ்வாதி, கரூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us