PUBLISHED ON : செப் 16, 2018

அ நிறம் | அளவு
கவலை...
மனிதர்களே... மனிதர்களே...
கவலைகளை வளர்த்து
மாய்ந்து போகும் மனிதர்களே...
முதன் முதலில்
கட்டு மரம் கட்டி
கடலில் போன மனிதனை
நினைத்துப் பாருங்கள்...
ஆழ்கடலில்
முத்துக் குளிக்க இறங்கிய
மனிதனை கொஞ்சம்
நினைத்துப் பாருங்கள்...
ஆகாயத்தில் பறந்த
முதல் மனிதன் நிலையை
கற்பனை செய்து
பாருங்கள்...
நிலவில் முதல் காலடி
வைத்த மனிதனின்
துணிவை
நினைத்துப் பாருங்கள்...
பல்லாயிரம் அடிகள்
சுரங்கத்தில் இறங்கி
தங்கம் எடுக்கும் மனிதனை
நினைத்துப் பாருங்கள்...
நினைத்து பார்ப்பதும்
கற்பனை செய்து பார்ப்பதும்
ஒப்பிட்டு பார்ப்பதும்
தவறில்லை...
அப்போதுதான் புரியும்
நம் கவலைகள் சிறிது...
நாம் வாழ்வது
சொர்க்கத்தில் என்பது!
சொல்கேளான் ஏ.வி.கிரி,
தாம்பரம்.
