PUBLISHED ON : நவ 25, 2018

அ நிறம் | அளவு
ஏன் வளர்கின்றன பிரச்னைகள்
கடல் அலைகள் போன்று
போராட்டங்கள்
தொடர் கதையாகிறது
இந்நாட்டில்!
எந்த ஆட்சியிலும்
எந்த திட்ட அறிவிப்புகளிலும்
கட்சிகளும், மக்களும்
எதிர்க்கின்றனர்!
போராட்டங்களில்
கூட்டம் கூடுகிறது
வன்முறை தொடர்கிறது
மக்கள் பாதிக்கின்றனர்!
பொது சொத்து
சேதப்படுத்தப்படுகிறது
காவலர்கள்
தாக்கப்படுகின்றனர்!
கட்சிகள், அமைப்புகள்
இயக்கங்கள், அணிகள்
மோதிக் கொள்கின்றன
சுயநலத்திற்காக!
திட்டங்கள், சட்டங்கள்
தீர்வு காணப்படாமல்
திகைக்கின்றன
நீதி மன்றங்கள்!
புண்ணுக்கு புனுகு
தடவுவது மாதிரி
கிடப்பில் போடப்படுகின்றன
பிரச்னைகள்!
நல்லவர்களும், நேர்மையானவர்களும்
கல்வியாளர்களும், அறிவியலாளர்களும்
அரசியல் அதிகாரத்திற்கு
வர விரும்பாமல்
ஒதுங்கி, விலகி மவுனமாக
இருப்பதாலேயே
தீர்க்கப்படாமல் வளர்கின்றன
பிரச்னைகள்!
— சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.
