
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாருங்கள்... வெற்றியின் வாசலுக்கு!
அவர் இப்படி இருக்கிறார்இவர் அப்படி இருக்கிறார்என்றெல்லாம்எவரையும் பார்த்துவாழ முற்படாதீர்கள்!
இயற்கைதனித்த அடையாளத்துடன்உங்களை இந்த உலகில்பிரத்யேகமாக படைத்துள்ளது!
உங்களுக்கான வாழ்க்கையைவாழ முற்பட்டால்வேதனையில் துவளவிடும்தொல்லைகளே இல்லை!
மூளையின் திறன்அனைவருக்கும் ஒன்றேஅதை முனை மழுங்கவிட்டுபுலம்ப வேண்டாம்!
எந்த திறமையுமின்றிஎவரும் படைக்கப்படவில்லைஒரு வாய்ப்புமின்றிஒருவருமே இல்லவே இல்லை!
இன்றே விழித்திடுங்கள்...புறப்படுங்கள்உங்களுக்காக காத்திருக்கும்வெற்றியின் வாசலுக்கு!
அ.ப.சங்கர், அம்பாபுரம்.

