PUBLISHED ON : ஆக 04, 2019

நட்பு!
எப்போதாவது
சந்திப்பதல்ல நட்பு...
எப்போதுமே
சந்திக்க செய்வதே
நட்பு!
முழு நிலவாய்
முளைத்து
பிறையாய்
தேய்வதல்ல நட்பு...
பிறையாய் தோன்றி
முழு நிலவாய்
வளர்வதே நட்பு!
சிரித்து பேசுவது
மட்டுமல்ல நட்பு...
சிந்திக்க துாண்டி
செயல்பட
வைப்பதே நட்பு!
அடிமைப்பட்டு
கிடப்பதல்ல நட்பு...
அறிவை வளர்த்தெடுப்பதே
நட்பு!
பழகுவதோடு மட்டும்
நின்று விடுவதல்ல நட்பு...
பாடப் புத்தகமாய்
இருப்பதே நட்பு!
உதவி செய்வது
மட்டுமல்ல நட்பு...
உயிருக்கு உயிராய்
வாழ்வதே நட்பு!
முக மலர்ச்சிக்கு
மட்டுமே
பயன்படுவதல்ல நட்பு...
இதய உணர்ச்சிக்கு
வழிவகை செய்வதே
நட்பு!
இன்பத்தில் மட்டும்
பங்கெடுப்பது நட்பல்ல...
துயரத்தில் உடனிருந்து
தோள் கொடுப்பதே
நட்பு!
பெருமை பேசி
அலைவதில்லை நட்பு...
பெரும் புயலில்
பேராண்மை காப்பதே
நட்பு!
வழி துணைக்கு
மட்டுமே
வருவது நட்பல்ல...
வாழ்வின் கடைசி வரையில்
துாணாய் இருந்து
துணை நிற்பதே
நட்பு!
நட்பு என்பது
அரிய செயல்...
அதை
நம்பிக்கையோடு காப்பதே
உரிய செயல்!
தே. இளையராஜா, விழுப்புரம்.
